Thursday, March 17, 2011

ஆறு வித்தியாசம்?






இன்னும் எத்தனை காலம்

மலைக்கள்ளனில் (அறுபதுகளில்) வந்த பாடல். இப்போதும் பொருந்துகிறது!


எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?
சொந்த நாட்டிலே! நம் நாட்டிலே!
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி பாமர மக்களை வலையினில் மாட்டி
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?

Friday, August 13, 2010

போன மச்சான் திரும்பி வந்தான்!

சென்ற பதிவின் தொடர்ச்சி..

மச்சானை கூட்டிச் சென்ற கான்ஸ்டபில் நேராக பெசன்ட் நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு இது மாதிரி மாட்டிக்கொண்ட கும்பலோட இவனையும் உட்கார வைத்து இன்னும் சிலர் கொண்டு வரப்படும் வரை காத்திருக்கச் செய்தனர். மணி இரவு ஒன்றரை ஆக மச்சான் எவ்ளோ சொல்லியும் அவர்கள் விடுவதாயில்லை. உருப்படியான கும்பல் சேர்ந்த பின் ஒரு ஜீப்பில் இவர்களை ஏற்றிக்கொண்டு சைதாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவர்களை கொண்டு சென்ற வார்டில் ஒரு துர்நாற்றம் நிலவிக்கொண்டே இருக்க, மருத்துவர் ஒருவர் வந்து இவர்களை குடிபோதை சோதனைக்கு உட்படுத்தினார் (என்ன செய்தார் என்று மச்சான் எங்களிடம் கூறியது நினைவில்லை). கடைசியாக இவர்கள் குடிபோதையில் இருந்ததிற்கான சான்றிதழ் ஒன்றை கொடுத்து மறுபடியும் ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் அனுப்பி வைத்தனர். காலையில் இவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்த பிளான் பண்ணி இருந்தனர்.

மணி மூணு ஆகி இருந்தது. காவல் நிலையத்திலேயே உட்காந்திருந்த மச்சான், ஐந்து மணி ஆனதும் இன்ஸ்பெக்டர் ஷிப்டு மாறியதை கவனித்தான். புதிதாக வந்திருந்த இன்ஸ்பெக்டரிடம் சென்று தான் ஒரு கணினி பொறியாளர் என்றும் ஒரு மதிக்கத்தக்க நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் சொல்லி தான் கொண்டு வந்திருந்த ஐடி கார்டைக் காட்டி நடந்ததை விவரித்துள்ளான்.  'என்ன தம்பி இவ்ளோ படிச்சிருக்கீங்க..இப்படி பண்ணலாமா ? இனிமே இப்படி பண்ணாதீங்க. ஒரு ஆயிரம் ரூபாவ பைனா கட்டிட்டு கெளம்புங்க' என்று அவர் சொல்ல, 'சரி சார். ஆனா என் கிட்ட காசு இல்ல. பக்கத்துல இருக்க ATMல எடுத்து வரேன் சார்' என்று சொன்னான். 'இருங்க தம்பி, கான்ஸ்டபில் ஒருத்தர உங்க கூட அனுப்பி வைக்கறேன்' என்று சொல்லி, இவனை ATM அனுப்பி வைத்தனர். காசை எடுத்து அவரிடம் கொடுத்த பின் அவனை ஒரு வழியாக வீடு அனுப்பி வைத்தனர். அப்போது மணி ஆறாக, மாமனார் வீட்டில் மச்சானின் முதல் இரவு முடிவுக்கு வந்தது.

Wednesday, August 11, 2010

போன மச்சான்!

சில பதிவுகளுக்கு முன்னால் நண்பன் (மச்சான்) ஒருவன் டிராபிக் போலீசிடம் மாட்டிக்கொண்டதைப் பற்றி சொல்வதாக சொல்லி இருந்தேன். பார்ட்டி முடிந்து நாங்கள் ஆறு பேரும் வீடு திரும்ப, மச்சானும் சக நண்பரும் ஒரு வண்டியில் அடையார் ஓவர் ப்ரிட்ஜை தாண்டி, பெசன்ட் நகர் சிக்னல் அருகே வந்து கொண்டிருந்தனர். அங்கு ஒரு இன்ஸ்பெக்டரும் மூன்று கான்ஸ்டபிள்களும் வண்டிகளை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.


இவர்கள் வருவதை பார்த்ததும் கான்ஸ்டபிள் ஒருவர் நிப்பாட்டச் சொல்லி கை காட்ட, மச்சானும் அவ்வாறே செய்தான். அவன் வண்டியில் எப்போதுமே ஹெட்லைட் எரிந்ததில்லை. 'ஏன் எரியல ?' என்று அவர் கேட்க மப்பில் இருந்த இவன் உளற ஆரம்பித்துவிட்டான். வாடை பலமாக வீச, 'குடிச்சிறிக்கியா ?' என்று கேட்டதும், 'இல்ல சார்' என்று இவன் மறுத்தான். அவர் பல முறை கேட்டும் இவன் மழுப்ப, பக்கத்தில் இருந்த நண்பன், 'மச்சான்! பேசாம ஒத்துக்கிட்டு அவர்கிட்ட கொஞ்சம் காச குடுத்து கரெக்ட் பண்ணுடா' என்று சொன்னான். அதை பொருட்படுத்தாமல், இவன் மேலும் மல்லுகட்ட, அவர் இவனின் பைக்கில் ஏறிக்கொண்டு அவனையும் பின் சீட்டில் ஏறி உட்காரச் சொன்னார். காதலி காதலன் பைக்கில் அமர்வது போல் இவனும் அமர்ந்து கொள்ள, வண்டியைக் கிளப்பிக்கொண்டு இருவரும் சென்று விட்டனர். இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நண்பன் என்ன செய்வதென்று தெரியாமல் பக்கத்தில் இருந்த மாட்டு வண்டியில் படுத்து காத்திருந்தான். ஒரு மணி நேரம் கழித்தும், மச்சான் வராமல் இருந்ததால் ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தான்.

'என்னடா ஆச்சி ? ஏன் இவ்வளவு நேரம்?' என்று நாங்கள் கேட்டதும் 'அவன் என்ன நடுரோட்ல விட்டுட்டு ஏதோ தியாகி மாதிரி போயிருக்காண்டா' என்று எரிச்சலோட நடந்த விஷயத்தை சொன்னான். சொன்னதை கேட்டதும் நாங்கள் எல்லோரும் குலுங்க குலுங்க சிரிச்சோம் (இப்படி சீரியஸ் ஆன நேரத்தில் சிரிப்பதெல்லாம் எங்களுக்கு வழக்கமாகிப் போயிருந்தது. துக்கம் அனுசரிக்க கூட்டமாக சென்று, அங்கு போய் சிரித்த அனுபவமும் உண்டு) . அந்த நேரம் சிரிச்சாலும் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்ற கவலையும் இருந்தது.

மச்சான் வீடு திரும்பிய கதையை இன்னொரு பதிவில் போடுகிறேன்!

Friday, August 6, 2010

சுருக்கல் - 'பிடிவாதம்'

எனது கிறுக்கல்கள் சுருக்கமாக..

பிடிவாதம்

கரை நீ
அலை நான்!
நுரை தள்ளி போகிறேன்!

சுருக்கல் - 'பற்போர்'

எனது கிறுக்கல்கள் சுருக்கமாக..

பற்போர்

வெள்ளை சட்டை! ஆயுள் சிறை!
பற்கள் போர் தொடுக்க
லெக் பீஸ் உள்ளே சென்றுகொண்டிருந்தது.

Friday, July 30, 2010

சுருக்கல் - 'சோப்பு கட்டி'

எனது கிறுக்கல்கள் சுருக்கமாக..

சோப்பு கட்டி

ஒட்டி உறவாடும்
அந்தரங்க தோழனே!
உன்னை உருத்தெரியாமல் சிதைக்கும்
யாம்தாம் உமக்கு எமனே!