Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, March 17, 2011

இன்னும் எத்தனை காலம்

மலைக்கள்ளனில் (அறுபதுகளில்) வந்த பாடல். இப்போதும் பொருந்துகிறது!


எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?
சொந்த நாட்டிலே! நம் நாட்டிலே!
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி பாமர மக்களை வலையினில் மாட்டி
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?

Sunday, December 30, 2007

வைகோவிற்கு கட்டி!


வைகோவிற்கு எங்கு கட்டி என்று கேட்காதீர்கள். தினமலரில் வந்த செய்திபடி வைகோவின் நாற்பது ஆண்டு கால பொது வாழ்க்கையை பாராட்டி அவருக்கு எடைக்கு எடை வெள்ளிக் கட்டிகள் அளிக்கப்பட்டதாம். பெரிய தராசில் அவரை உட்கார வைத்து எடை போட்டனராம்.

தி.மு.க வின் கூட்டணியில் இருந்த போது மக்கள் மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்ந்தார். ஆனால் அ.தி.மு.க வின் கூட்டணியில் சேர்ந்த பின் இவரின் செல்வாக்கு குறைந்ததென்றே சொல்லவேண்டும். இப்போது தராசு தட்டில் உட்கார்ந்து தமாசு பண்ணிகொண்டிருக்கிறார். ஹையோ! ஹையோ!

Tuesday, December 18, 2007

தமிழச்சி யார் ?


அண்மையில் நடந்து முடிந்த திமுக நெல்லை மாநாட்டில் ஒரு புதிய பெண்மணியை பார்க்க முடிந்தது. இவர் பெயர் தமிழச்சி. ஆம்! யார் இவர் ? இவரை பற்றிய சிறு செய்தி கீழே!

இவர் சகோதரர் தங்கம் தென்னரசு ஒரு தமி்ழக மந்திரி. ராணி மேரி கல்லூரியின் விரிவுரையாளர். அரசியலுக்காக வேலையை துறந்தவராம். அழகிரியின் ஆதரவாளர் :)