Monday, January 14, 2008

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


அனைத்து நண்பர் மற்றும் குடும்பத்தாருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள். சென்ற பொங்கலன்று 500 மைல் பயணம் செய்து போக்கிரி படம் பார்த்த நினைவு இன்னும் பசுமையாகவே இருக்கும் வேலையில் அடுத்த பொங்கல் வந்துவிட்டது. சும்மா ஜெட் வேகத்துல காலம் பறக்குது மாமே!

பிரிட்னி


ஆங்கில பாப் உலகில் பிரசித்தி பெற்ற பெண்மணி பிரிட்னி சிபியர்ஸ். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஆகியுள்ளது. இவரின் முதல் திருமணம் வெறும் 55 மணி நேரமே நீடித்திருந்தது. இப்போது பாகிஸ்தானியர் ஒருவரை காதலிக்கிறார். 'காலீப்' என்பவரை மணக்க விரும்புவதாக செய்தி. இதற்காக இஸ்லாமிய மதத்திற்கு மாறி பாகிஸ்தானுக்கு குடி போகவும் தயாராக உள்ளாராம். இதனால் அமெரிக்க பெண்களின் இடையே பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார் இவர்.

கிரிக்கெட் வீரர் இம்ரான் கானை மணந்த லண்டன் அழகி ஜெமீமா கான் விவாகரத்து பெற்று லண்டன் திரும்பியது நாம் அறிந்ததே. இப்போது இந்த கதை எப்படி போகின்றது என்று பார்போம்.

Sunday, January 13, 2008

ஆசை


நான் இந்தியா சென்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. இப்போது வீடு திரும்ப ரொம்ப ஆசை. சென்ற முறை வீடு சென்ற போது இரண்டு மாதம் ஆன உடனே மீண்டும் அமெரிக்கா திரும்ப வேண்டும் என்ற ஆசை. ஆக இக்கரைக்கு அக்கரை பச்சை. ஆனால் வீட்டு ஆசை வர இரண்டு ஆண்டுகள் தேவை பட்டதென்றால், வெளிநாட்டு மோகம் வர ஒரு மாதமே ஆனது. ஆனால் இம்முறை சென்றால் அப்படி ஆகாதென்றே நினைக்கிறேன்.

நான் இந்தியாவில் இல்லாத சமயம் குடும்பத்தில் பல காரியங்கள் நிகழ்ந்தன. அவற்றில் சுப காரியங்களும் உண்டு சவ காரியங்களும் உண்டு. இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் என் தந்தைக்கு இருதய சிகிச்சை நடந்த போது என்னால் அங்கு போக முடியாமல் போனது. சிகிச்சைக்கு பின்னர் நான் இன்னும் வீடு செல்லவில்லை. எனவே ஒரு குற்ற உணர்வு என்னுள் இன்றும் என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. என்னுடைய இளைய சகோதரன் அப்போது உறுதுணையாக இருந்ததால் சிகிச்சை சிரமமின்றி முடிந்தது.

எனது சகோதரனை பற்றியும் சொல்லியாக வேண்டும். அவ்வப்போது சூர்யா அல்லது கார்த்தியின் நேர்காணல் தொலைகாட்சியில் வந்தால், சூர்யா தனது தம்பியை பற்றி மிக உயர்வாக பேசுவார். அவர்கள் இருவரும் பிரிந்து இருந்த காலங்கள் பற்றியும் அப்போது அவர்கள் பரிந்து கொண்ட கனிவான கடிதங்கள், உரையாடல்கள் பற்றியும் இருவருமே சுவராஸ்யமாக பேசுவார்கள். அது போன்றதொன்றுதான் எங்கள் உறவும். சகோதரர்களின் இடையே உள்ள உறவை பற்றி விளக்க ஒரு நல்ல வார்த்தை ஒன்று கண்டுபிடிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ரொம்பவும் உணர்ச்சிவசபட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன் ('விட்ரா விட்ரா சூனா பானா' என்கிறீர்களா என்ன ?). என் சொந்தக்கதை இருந்துவிட்டுப்போகட்டும் அடுத்த பதிவில் ஒரு ஜாலியான விஷயத்தைப்பற்றி கதைக்கிறேன்.

Friday, January 11, 2008

இது என்ன நியாயம்?


இன்று வந்த செய்திபடி தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது. காலம் காலமாக தமிழர்களின் வீர விளையாட்டாக இருந்து வருகிறது ஜல்லிக்கட்டு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் பள்ளிக்கூடத்தில் படித்த பாடத்தில் கூட இவ்விளையாட்டு நமது பாரம்பரியம் என்று கற்பிக்கப்பட்டது. ஆனால் இன்றோ இதற்கு இந்த நிலை.

சென்ற மாதம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானி கொடுக்க 41 ஒட்டகங்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டன. குர்பானி கொடுக்க தடை விதிக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்த போது தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஒட்டகங்களை வெட்ட தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர்.

'தமிழ்', 'தமிழன்' என்று கூக்குரலிடும் பா.ம.க.வினரும், விடுதலை புலிகளும் இதற்கு மட்டும் ஏன் மௌனம் சாதிக்கின்றனர்? சில்லறை விஷயங்களுக்கெல்லாம் கூப்பாடு போடும் இவர்கள் இப்போது முதுகை சொரிந்து கொண்டிருப்பது ஏன்?

இதற்காக இன்றைய தீர்ப்பை எதிர்க்கிறேன் என்று சொல்லவில்லை. அடுத்த முறை குர்பானி செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் நம் மக்கள் வழக்கு தொடர வேண்டும்.

Game on


The fight for the espresso/coffee market has now become intense. As Starbucks struggles under stormy conditions, McDonald's has decided to expand its service offering at each of its restaurants to serve cappuccinos, lattes and other drinks. All these days, Starbucks had more or less established a monopoly market, but now they have stiff competition from an equivalently strong opponent. Last year alone the shares of Starbucks lost 48%. At the same time share of McDonald's have increased by 33%.

BTW, did you know that McDonald's serve Burrito's for breakfast ? Chipotle's and TacoBell, please wake up!

Thursday, January 10, 2008

பாண்டியன் மரணம்


மண்வாசனை படத்தில் இயக்குனர் பாரதிராஜா மூலம் அறிமுகம் ஆகியவர் பாண்டியன். கிட்டத்தட்ட 80 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர் நேற்று மஞ்சள் காமாளை நோயால் மதுரையில் காலமானார். சில மாதங்களுக்கு முன் பணம் வாங்கி மோசடி செய்ததாக இவரை போலீஸ் கைது செய்து பின்பு விடிவித்தது. ஆரம்பத்தில் திமுகவில் இருந்து பின்னர் அதிமுகவின் பிரமூகரான இவர் அக்கட்சியின் பல பொதுகூட்டங்களிலும், தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டிருந்தார். 48 வயதான இவருக்கு ஒரு மகன் மற்றும் மனைவி உள்ளனர். திரையுலகைச் சேர்ந்த பலரும் இவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tuesday, January 8, 2008

How cool can Bill Gates get ..

Watch this video to see how cool Bill Gates can get. Bill is planning to move full time into Microsoft foundation. He will still however remain as the Chairman of Microsoft.