Saturday, February 9, 2008

சுருக்கல் - 'நரை'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

நரை..

நிலக்கரிச் சுரங்கத்தில் வெள்ளி!
அதை சாயம் பூசி
கரி ஆக்கினாள் கள்ளி!!

Thursday, February 7, 2008

ஜூம்பா


'நல்லா இடுப்ப வளைச்சி நெளிச்சி ஆடணும்' ங்கிற பருத்திவீரன் டயலாக் மாதிரி நேற்று 'டங்கா டுங்கா..' னு ஜூம்பா நடனம் போட்டேன். நண்பர்கள் இருவர் நல்ல cardio பயிற்சி என்று ஜூம்பா வகுப்பிற்கு அழைத்தனர். அடிவாங்கப் போகும் வடிவேல் அசால்டாக ஆட்டோவில் ஏறிப் போற மாதிரி காரில் ஏறி வகுப்பிற்கு சென்றேன்.

வகுப்பில், தக தகன்னு 16ல் இருந்து 60 வயதுக்குள் இருந்த அம்மணியர்கள் கூடி இருந்தனர். நாங்கள் போய் சேரவும் நடனம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. முன்னின்ற ஒரு பயிற்சியாளர் ஆட, நாங்கள் அவரை பார்த்து ஆடினோம் (அட.. அப்டீனு சொல்லிக்க வேண்டியதுதான்). படு வேகமான ப்ரசீலிய நாட்டு இசை சத்தமாக ஓடிக் கொண்டிருக்க ஒரு மணி நேரம் கை, கால், இடுப்பை நல்லா வளைச்சி நெளிச்சி ஆடினோம். பக்கத்தில் கடா போல் இருந்த நண்பன், ஆடுகிறேன் என்கிற சாக்கில் என் காலை ஒரு மிதி மிதித்தான். வலி பின்னி எடுத்தது! ஆனால் கூட ஆடினவர்களின் அழகு வலியை குறைக்க, இன்னும் பீறிகிட்டு ஆடினோம் :) ! வகுப்புகள் இனியும் தொடரும்!!!

Wednesday, February 6, 2008

சுருக்கல் - 'உயிரோசை'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

உயிரோசை..

பெண்ணே!
இதமான உயிரோசை எழுகிறது!
இதயத்தில் துளைகள் போட்டு
புல்லாங்குழல் வாசிக்கிறாய்!

Monday, February 4, 2008

சுருக்கல் - 'மென்பொறியாளர்கள்'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

மென்பொறியாளர்கள்..

அன்றைய கல்லூரி காலத்துப் பட்டாம்பூச்சிகள்!
கணினித்திரையின் வெளிச்சத்தில்..
இன்றைய மெல்லச் சாகும் விட்டில் பூச்சிகள்!

சுருக்கல் - 'கள்ளக் காதல்'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

கள்ளக் காதல்..

கற்றது உடலளவு
கல்லாதது மனதளவு!

Saturday, February 2, 2008

சுருக்கல் - 'நமீதா'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

நமீதா..

நமீதா!
உன் பெயரில் விறகுக்கட்டை கடை வைத்தேன்
வியாபாரம் அமோகம்!

தண்ணீரில் தத்தளித்தவனும்..
உன் பெயரை கேட்டவுடன் மிதந்தான்!

மொத்தத்தில்..
Log ஆகா இருந்து kick தரும் Logic நீ!

Friday, February 1, 2008

சுருக்கல் - 'மெழுகுவர்த்தி'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

மெழுகுவர்த்தி..

பெண்ணே!
உன் பார்வையில் பற்றிக்கொண்ட மெழுகுவர்த்தி நான்!
முழுதாக நான் கறையும் முன்..
உன் மூச்சுக் காற்றால் என்னை அணைத்து விடு!