Monday, December 31, 2007

புத்தாண்டு - New Year 2008


புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அனைத்து நண்பர் மற்றும் குடும்பத்தாருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Happy New Year!
Wishing all friends and family a Hearty and Happy New Year.

Sunday, December 30, 2007

வைகோவிற்கு கட்டி!


வைகோவிற்கு எங்கு கட்டி என்று கேட்காதீர்கள். தினமலரில் வந்த செய்திபடி வைகோவின் நாற்பது ஆண்டு கால பொது வாழ்க்கையை பாராட்டி அவருக்கு எடைக்கு எடை வெள்ளிக் கட்டிகள் அளிக்கப்பட்டதாம். பெரிய தராசில் அவரை உட்கார வைத்து எடை போட்டனராம்.

தி.மு.க வின் கூட்டணியில் இருந்த போது மக்கள் மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்ந்தார். ஆனால் அ.தி.மு.க வின் கூட்டணியில் சேர்ந்த பின் இவரின் செல்வாக்கு குறைந்ததென்றே சொல்லவேண்டும். இப்போது தராசு தட்டில் உட்கார்ந்து தமாசு பண்ணிகொண்டிருக்கிறார். ஹையோ! ஹையோ!

ஜிவ்வு!


நேற்று கார்நேகி அறிவியல் மையத்திற்கு சென்று இருந்தேன். அங்கு மனித உடம்பு அருங்காட்சியகம் ஒன்றை வைத்திருந்தனர். இறந்த மனிதர்களின் உடலை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து வைத்து இருந்தனர். உடல் தசை, மூளை, இருதயம், நுரையீரல், செரிமான உறுப்பு, ஆண்/பெண் இனப்பெருக்க உறுப்பு, 2/4/8/16/32 வார சிசு வளர்ச்சி என்று பலவற்றினை பார்வைக்கு வைத்து இருந்தனர். காட்சியத்தை முக்கால் மணி நேரத்தில் பார்த்து முடித்து விடலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் பார்க்க பார்க்க மிரட்சி அடைந்து புல்லரித்து போனேன். வெளியே வரும் போது இரண்டு மணி நேரம் கழிந்திருந்தது.

ம்ம்ம்.. சொல்ல மறந்து விட்டேன். மனித மூளையையும், நுரையீரலையும் என் கையில் தந்தார்கள்...ஜிவ்வென்று இருந்தது!

Friday, December 28, 2007

iMovies - Coming soon to your handsets


Apple's stock price is constantly on the rise. This year's Apple's launch of the iPhone was a prime booster to the stock.

Yesterday there were reports that Apple is close to announcing a deal with FOX to offer movies for "rent" via its iTunes store. With the iPhone and almost all of the iPods having the ability to run/stream videos, this would be a niche market for Apple. In the near future, if you are a proud owner of an iPhone or an iPod, you wouldn't need to sit idle at the airports when your flight is delayed. Switch on your iPhone and start watching recently released movies!

By the way, where do you think Apple's stock would stand by end of next year ? Probably at 300 ? Maybe!!

Thursday, December 27, 2007

அய்யோ போச்சே! போச்சே!


நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால் பாரிஸ் ஹில்டனை உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். இவரின் குடும்ப சொத்து அமெரிக்க டாலரின் மதிப்பில் 2.4 பில்லியன் ஆகும். இந்த பண மிதப்பில் தான் என்னவோ இவர் பயங்கர ஆட்டம் போட்டார். 2003ல் இவர் தனது பாய் பிரண்டுடன் செய்த லீலைகள் இணையத்தில் வெளியாகியது. இந்த ஆண்டும் வேறு ஒரு சிக்கலில் சிறைக்கு சென்றார்.

ஆனால் இன்று இவர் தலையில் பெரிய இடி விழுந்திருக்கிறது. இவரது தாத்தா பாரன் ஹில்டன், 2.3 பில்லியனில் 97 விழுக்காட்டை அறக்கட்டளை ஒன்றிற்கு எழுதி வைத்து விட்டார். ஒரு தமிழ் திரைப்படத்தில் கிணறில் பாடி கிடக்கின்றது என்று ஊரே சொல்ல கௌண்டமணி அதை பார்க்க ஓடுவார். கிணறின் அருகே கிழவி ஒருவர் புலம்பிக் கொண்டிருப்பார் 'அய்யோ போச்சே! போச்சே!' என்று. அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

Assasination of Benazir Bhutto


Today was a sad day to hit all the South East Asians. Irrespective of what religion and country we belong we should all condemn this act of violence and terrorism. Bhutto was one strong lady among the male chauvinists in Pakistan.

She will always be remembered in all our hearts and I pray her soul rest in peace.

Wednesday, December 26, 2007

2008 Events


Here are some important events to watch out in 2008.

1. The 2008 Olympics in Beijing, China.
2. US Presidential elections and end of Bush's term.
3. Bhutan's first ever elections to make it a democratic country.
3. Completion of Burj Dubai, the new tallest building in the world.
4. Landing of the Phoenix spacecraft on Mars.
5. Karunanidhi probably announcing his heir to DMK.