
'நல்லா இடுப்ப வளைச்சி நெளிச்சி ஆடணும்' ங்கிற பருத்திவீரன் டயலாக் மாதிரி நேற்று 'டங்கா டுங்கா..' னு ஜூம்பா நடனம் போட்டேன். நண்பர்கள் இருவர் நல்ல cardio பயிற்சி என்று ஜூம்பா வகுப்பிற்கு அழைத்தனர். அடிவாங்கப் போகும் வடிவேல் அசால்டாக ஆட்டோவில் ஏறிப் போற மாதிரி காரில் ஏறி வகுப்பிற்கு சென்றேன்.
வகுப்பில், தக தகன்னு 16ல் இருந்து 60 வயதுக்குள் இருந்த அம்மணியர்கள் கூடி இருந்தனர். நாங்கள் போய் சேரவும் நடனம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. முன்னின்ற ஒரு பயிற்சியாளர் ஆட, நாங்கள் அவரை பார்த்து ஆடினோம் (அட.. அப்டீனு சொல்லிக்க வேண்டியதுதான்). படு வேகமான ப்ரசீலிய நாட்டு இசை சத்தமாக ஓடிக் கொண்டிருக்க ஒரு மணி நேரம் கை, கால், இடுப்பை நல்லா வளைச்சி நெளிச்சி ஆடினோம். பக்கத்தில் கடா போல் இருந்த நண்பன், ஆடுகிறேன் என்கிற சாக்கில் என் காலை ஒரு மிதி மிதித்தான். வலி பின்னி எடுத்தது! ஆனால் கூட ஆடினவர்களின் அழகு வலியை குறைக்க, இன்னும் பீறிகிட்டு ஆடினோம் :) ! வகுப்புகள் இனியும் தொடரும்!!!