Thursday, February 28, 2008

சுருக்கல் - 'வெள்ளை காகிதம்'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

வெள்ளை காகிதம்..

பிரிண்டரில் நுழைந்த வெள்ளை காகிதமாய்
உன்னில் நுழைந்தேன்!
உன் அச்சுகள் என்னில் பதிய..
அர்த்தம் பெற்றதாய் உணர்கிறேன்!

Wednesday, February 27, 2008

மலேசிய பாடல்

நான் அண்மையில் ரசித்த மலேசிய பாடல் ஒன்று கீழே..

Thursday, February 21, 2008

சுருக்கல் - 'சிரிப்பு'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

சிரிப்பு..

குட்டி தீவே!
சில்லரை கொட்டுவது போல் சிரிக்கிறாய்!
என் செல்பேசி நிறுவனத்தின் உண்டியல் நிரம்பி வழிகிறது!!

Tuesday, February 19, 2008

அயம் பேக்..


பில்லா அஜித் சொல்வது போல..அயம் பேக்!

நான்கு நாள் உல்லாச பயணம் ஒரு வழியாக முடிந்தது! அந்த பாராசூட்டில் பறப்பது நானும் மற்றும் ஒரு நண்பரும் தானுங்கோ!!

Thursday, February 14, 2008

சுருக்கல் - 'ஐஸ் ஐஸ் பேபி'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

ஐஸ் ஐஸ் பேபி..

பூமிக்கு ஐஸ் வைத்தவன் யாரோ தெரியவில்லை..
பெண்ணே!
என் பூமி நீதான்..
எத்தனை முறை உருகினாலும்
ஐஸ் வைப்பேன்!

சுருக்கல் - 'களவாணி முத்தம்'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

களவாணி முத்தம்..

பெண்ணே!
எண்ணக் குவியலில் வழுக்கி..
உன் கன்னக்குழியில் விழுந்தேன்!
யாரும் பார்க்கும் முன்..
களவாணித்தனமாய் உனை முத்தமிட்டு எழுந்தேன்!!

காதலர் அன்பர்களுக்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!

Monday, February 11, 2008

சுருக்கல் - 'கண்ணீரின் கெஞ்சல்'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

கண்ணீரின் கெஞ்சல்..

கண்ணுக்குள் இருந்தவனை கை விடலாமா ?
விழியின் இமையை விடாது பிடித்துத் தொங்கும்..
கண்ணீரும் கெஞ்சுகிறது!

Saturday, February 9, 2008

சுருக்கல் - 'நரை'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

நரை..

நிலக்கரிச் சுரங்கத்தில் வெள்ளி!
அதை சாயம் பூசி
கரி ஆக்கினாள் கள்ளி!!

Thursday, February 7, 2008

ஜூம்பா


'நல்லா இடுப்ப வளைச்சி நெளிச்சி ஆடணும்' ங்கிற பருத்திவீரன் டயலாக் மாதிரி நேற்று 'டங்கா டுங்கா..' னு ஜூம்பா நடனம் போட்டேன். நண்பர்கள் இருவர் நல்ல cardio பயிற்சி என்று ஜூம்பா வகுப்பிற்கு அழைத்தனர். அடிவாங்கப் போகும் வடிவேல் அசால்டாக ஆட்டோவில் ஏறிப் போற மாதிரி காரில் ஏறி வகுப்பிற்கு சென்றேன்.

வகுப்பில், தக தகன்னு 16ல் இருந்து 60 வயதுக்குள் இருந்த அம்மணியர்கள் கூடி இருந்தனர். நாங்கள் போய் சேரவும் நடனம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. முன்னின்ற ஒரு பயிற்சியாளர் ஆட, நாங்கள் அவரை பார்த்து ஆடினோம் (அட.. அப்டீனு சொல்லிக்க வேண்டியதுதான்). படு வேகமான ப்ரசீலிய நாட்டு இசை சத்தமாக ஓடிக் கொண்டிருக்க ஒரு மணி நேரம் கை, கால், இடுப்பை நல்லா வளைச்சி நெளிச்சி ஆடினோம். பக்கத்தில் கடா போல் இருந்த நண்பன், ஆடுகிறேன் என்கிற சாக்கில் என் காலை ஒரு மிதி மிதித்தான். வலி பின்னி எடுத்தது! ஆனால் கூட ஆடினவர்களின் அழகு வலியை குறைக்க, இன்னும் பீறிகிட்டு ஆடினோம் :) ! வகுப்புகள் இனியும் தொடரும்!!!

Wednesday, February 6, 2008

சுருக்கல் - 'உயிரோசை'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

உயிரோசை..

பெண்ணே!
இதமான உயிரோசை எழுகிறது!
இதயத்தில் துளைகள் போட்டு
புல்லாங்குழல் வாசிக்கிறாய்!

Monday, February 4, 2008

சுருக்கல் - 'மென்பொறியாளர்கள்'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

மென்பொறியாளர்கள்..

அன்றைய கல்லூரி காலத்துப் பட்டாம்பூச்சிகள்!
கணினித்திரையின் வெளிச்சத்தில்..
இன்றைய மெல்லச் சாகும் விட்டில் பூச்சிகள்!

சுருக்கல் - 'கள்ளக் காதல்'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

கள்ளக் காதல்..

கற்றது உடலளவு
கல்லாதது மனதளவு!

Saturday, February 2, 2008

சுருக்கல் - 'நமீதா'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

நமீதா..

நமீதா!
உன் பெயரில் விறகுக்கட்டை கடை வைத்தேன்
வியாபாரம் அமோகம்!

தண்ணீரில் தத்தளித்தவனும்..
உன் பெயரை கேட்டவுடன் மிதந்தான்!

மொத்தத்தில்..
Log ஆகா இருந்து kick தரும் Logic நீ!

Friday, February 1, 2008

சுருக்கல் - 'மெழுகுவர்த்தி'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

மெழுகுவர்த்தி..

பெண்ணே!
உன் பார்வையில் பற்றிக்கொண்ட மெழுகுவர்த்தி நான்!
முழுதாக நான் கறையும் முன்..
உன் மூச்சுக் காற்றால் என்னை அணைத்து விடு!