Friday, July 30, 2010

சுருக்கல் - 'சோப்பு கட்டி'

எனது கிறுக்கல்கள் சுருக்கமாக..

சோப்பு கட்டி

ஒட்டி உறவாடும்
அந்தரங்க தோழனே!
உன்னை உருத்தெரியாமல் சிதைக்கும்
யாம்தாம் உமக்கு எமனே!

ஒரு ரீ-என்ட்ரி


பதிவு செஞ்சு ரெண்டு வருஷம் மேல் ஆச்சு! இப்போ கொஞ்சம் சம்மர் லீவு; அதான் மறுபடியும் ஒரு ரீ-என்ட்ரி...
நான் சென்னையில் 2002 இருந்து 2004 வர இருந்தேன். மந்தவெளியில ஒரு வருஷம் இருந்தேன். பின்னால ஆபீஸ் மாறினதால திருவான்மியூர் பக்கம் போயிட்டேன். மறுபடியும் சென்னையில 2006ல மூணு மாசம் பழைய திருவான்மியூர் வீட்டுக்கு வந்து இருந்தேன். அதுக்கப்புறம் 2008ல கல்யாணம் ஆகி குரோம்பேட்டைல ஒரு வருஷம் இருந்தேன்..இத்தன காலத்துல நண்பர்கள் டிராபிக் போலீசுல மாட்னாலும் நான் மட்டும் சிக்காம இருந்தேன். இத்தனைக்கும் என் வண்டி பாண்டிச்சேரி நம்பர் பிளேட். அப்பப்போ வெள்ளை சட்டை காக்கி தொப்பி பார்த்து உள்ளுக்குள்ள அல்லு விட்டாலும், அந்த பக்கம் தலைய திருப்பாம பந்தாவா தப்பிச்சிடுவேன். ஒரு தடவ நண்பர்களோடு ஒரு பார்டி முடிஞ்ச கையோட வீடு திரும்பும் போது, நான் எவ்ளோ சொல்லியும் கேக்காமல் ஆட்டோல போகாம மூணு பைக்ல ஆறு பேரா போனோம். நான் போன வண்டிய ஓட்டுன நண்பன் மப்புல இருந்தாலும் உஷாரா போலீஸ் செக் பண்ணாத வழியா வீடு வந்து சேர்ந்தான். எல்லா நண்பர்கள் குருப்ளையும் ஒரு குழப்பவாதி ஒருத்தன் இருப்பான். எங்க செட்ல இருந்த அவன் மட்டும் எந்த பக்கம் போறதுன்னு தெரியாம, போலீசு இருக்குற பக்கமா போய் சிக்கிட்டான். அதுக்கப்புறம் நடந்த கூத்த இன்னொரு பதிவுல போடறேன்.

கமிங் பேக் டு தி பாயிண்ட், சென்னையில் இருந்து கனடா கிளம்புவதால, வண்டிய கொண்டு போய் ஒரு சர்வீஸ் முடிச்சு திரும்பிட்டு இருந்தேன் (வண்டிய விக்குருதா ஒரு ப்ளான்). வெற்றி தியீடேருக்கு முன்னால சிக்னல் இல்லாத காரணத்துனால அங்க ஒரு ட்ராபிக் பீசி இருப்பாரு. கடந்த ரெண்டு வாரமா ஒரு கத்துக்குட்டி பீசீக்கு அங்க டூட்டி. அந்த பீசி நான் வந்த சைடுக்கு கிரீன் சிக்னல் போட, நான் கியர் போட்டு ஆக்சிலேடர திருப்பினதும் வண்டி நின்னு போச்சு. நியுற்றள்ள வண்டிய போட்டு உதைக்கிறேன் உதைக்கிறேன், வண்டி ஸ்டார்ட் ஆகல. அதுக்குள்ள பின்ன இருந்த வண்டியேல்லாம் ஹாரன் அடிச்சுகுட்டே என்ன முந்தி செல்ல, கடுப்பான பீசி என் பக்கமா நடைய கட்டினார். நான் இன்னும் வேகமா உதைக்க ஆரம்பிச்சேன். அதுக்குள்ள வண்டி பக்கத்துல வந்த அவர், 'வண்டிய ஓரம் கட்டி ஸ்டார்ட் பண்ணுயா' அப்டீனார். 'சாரி சார்!' அப்டீன்னு நான் அசடு வழிஞ்சதும் என் நம்பர் பிளேட்டை பார்த்த அவர், சடார் என என் வண்டி சாவியை பிடுங்கினார். NOC இருக்கா அப்டீன்னு கேக்க, 'போயும் போயும் கடைசி நாள் அதுவுமா சிக்குனோம், அதுவும் ஒரு கத்துக்குட்டி கிட்ட போயி..' அப்டீன்னு நெனைசுக்குட்டே 'இல்ல சார்' அப்டீன்னு சொன்னேன். 'ஒரு நூறு ரூபா எடு இல்ல பைன் கட்டு' அப்டீனாறு. அவரு கிட்ட ஒரு பைன் புக்கு கூட இல்ல. பர்ஸ தொழாவி 'அம்பது ரூபா தான் சார் இருக்கு..ஒரு இன்டர்வுயுக்கு போயுகிட்டு இருக்கேன் சார். அவசரம்' அப்டீன்னு புருடா விட்டேன். வந்த வரைக்கும் லாபம் அப்டீன்னு அவரும் அதை வாங்கி கொள்ள, பைக்க ஓரம் கட்டி எரிச்சலோட உதைச்சேன். ஒரே உதைல அதுவும் ஸ்டார்ட் ஆச்சு.