Friday, August 13, 2010

போன மச்சான் திரும்பி வந்தான்!

சென்ற பதிவின் தொடர்ச்சி..

மச்சானை கூட்டிச் சென்ற கான்ஸ்டபில் நேராக பெசன்ட் நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு இது மாதிரி மாட்டிக்கொண்ட கும்பலோட இவனையும் உட்கார வைத்து இன்னும் சிலர் கொண்டு வரப்படும் வரை காத்திருக்கச் செய்தனர். மணி இரவு ஒன்றரை ஆக மச்சான் எவ்ளோ சொல்லியும் அவர்கள் விடுவதாயில்லை. உருப்படியான கும்பல் சேர்ந்த பின் ஒரு ஜீப்பில் இவர்களை ஏற்றிக்கொண்டு சைதாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவர்களை கொண்டு சென்ற வார்டில் ஒரு துர்நாற்றம் நிலவிக்கொண்டே இருக்க, மருத்துவர் ஒருவர் வந்து இவர்களை குடிபோதை சோதனைக்கு உட்படுத்தினார் (என்ன செய்தார் என்று மச்சான் எங்களிடம் கூறியது நினைவில்லை). கடைசியாக இவர்கள் குடிபோதையில் இருந்ததிற்கான சான்றிதழ் ஒன்றை கொடுத்து மறுபடியும் ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் அனுப்பி வைத்தனர். காலையில் இவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்த பிளான் பண்ணி இருந்தனர்.

மணி மூணு ஆகி இருந்தது. காவல் நிலையத்திலேயே உட்காந்திருந்த மச்சான், ஐந்து மணி ஆனதும் இன்ஸ்பெக்டர் ஷிப்டு மாறியதை கவனித்தான். புதிதாக வந்திருந்த இன்ஸ்பெக்டரிடம் சென்று தான் ஒரு கணினி பொறியாளர் என்றும் ஒரு மதிக்கத்தக்க நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் சொல்லி தான் கொண்டு வந்திருந்த ஐடி கார்டைக் காட்டி நடந்ததை விவரித்துள்ளான்.  'என்ன தம்பி இவ்ளோ படிச்சிருக்கீங்க..இப்படி பண்ணலாமா ? இனிமே இப்படி பண்ணாதீங்க. ஒரு ஆயிரம் ரூபாவ பைனா கட்டிட்டு கெளம்புங்க' என்று அவர் சொல்ல, 'சரி சார். ஆனா என் கிட்ட காசு இல்ல. பக்கத்துல இருக்க ATMல எடுத்து வரேன் சார்' என்று சொன்னான். 'இருங்க தம்பி, கான்ஸ்டபில் ஒருத்தர உங்க கூட அனுப்பி வைக்கறேன்' என்று சொல்லி, இவனை ATM அனுப்பி வைத்தனர். காசை எடுத்து அவரிடம் கொடுத்த பின் அவனை ஒரு வழியாக வீடு அனுப்பி வைத்தனர். அப்போது மணி ஆறாக, மாமனார் வீட்டில் மச்சானின் முதல் இரவு முடிவுக்கு வந்தது.

No comments: