Tuesday, March 25, 2008
சுருக்கல் - 'ஒரு துளி பொட்டு'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
ஒரு துளி பொட்டு..
அழகே!
உன் நெற்றியில் ஓயாமல் விளையாடிய ஒற்றை முடி..
அது சிந்திய வியர்வை துளிதானோ உன் நெற்றிப்பொட்டு?
சுருக்கல் - 'சலசலப்பு'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
சலசலப்பு..
பெண்ணே!
உன் மெல்லிய பாதம் தரையை தழுவ..
காய்ந்த சருகும் சலசலத்தது
என் மனம் எம்மாத்திரம்?
Sunday, March 23, 2008
ரகுவரன்..
வேலை பளு காரணத்தால் எழுத முடியவில்லை..ஒரு வாரம் போல் ஆகிவிட்டது..அதற்குள் ஒரு துயர சம்பவம் நிகழந்துவிட்டது. தமிழ் சினிமாவில் குரலாலும், உடல் வாகுவாலும் மட்டுமே வில்லன்கள் ஜொலித்த நிலையில், வில்லத்தனதுக்கே ஒரு புது இலக்கணத்தை வகுத்தவர் ரகுவரன். இவரின் மரணச் செய்தியை கேட்ட போது முகத்தில் சடாரென்று யாரோ அடித்தது போல் இருந்தது.
எழுத்துலகம் சுஜாதாவை இழக்க, அடுத்த சில நாட்களில் திரையுலகம் இன்னொரு இழப்பை சந்தித்திருக்கிறது. இவரை பிரிந்து வாடும் சுற்றத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
Tuesday, March 11, 2008
சுருக்கல் - 'பார்வைக்கு ஏக்கம்'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
பார்வைக்கு ஏக்கம்..
உயிரே..
சற்றே திரும்பி பார்த்தால்தான் என்ன?
ஏமாற்றி செல்லும் கார் மேகமாய் கடந்து செல்கிறாய்..
உன் மழை பார்வை படும் இடத்தில் காளானாய் முளைக்க துடிக்கிறேன்!!
இன்னுமொரு மலேசிய பாடல்
இதமான இன்னுமொரு மலேசிய பாடல் ஒன்று கீழே..
Monday, March 10, 2008
கனா காணும் காலங்கள்
எப்போதாவது நீங்கள் கனவை வேண்டுமென்றே கலைத்ததுண்டா? நான் கலைத்ததுண்டு. அவ்வப்போது ஏதேனும் கெட்ட கனவுகள் வந்தால் இது கண்டிப்பாக நடக்க வாய்ப்பில்லை என்று என் மூளையில் ஏதோ ஒன்று சொல்ல நான் கண் விழித்து பார்ப்பதுண்டு. எவ்வளவு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும் கஷ்டப்பட்டு கண்களை திறக்க முற்படுவேன். சில சமயங்களில் கண் திறக்க இயலாத போது கண் மூடிய நிலையிலேயே இயல்பு நிலைக்கு திரும்பி மறுபடியும் புது கனவை ஆரம்பிப்பதுண்டு.
இன்னுமொரு விஷயம். கனவுகள் கலர் கனவுகளா இல்லை கருப்பு வெள்ளை கனவுகளா என்ற கேள்விக்கு அவ்வப்போது விடை கிடைப்பதுண்டு. யாரோ எங்கேயோ என்னிடம் இந்த கேள்வியை கேட்டதாலோ என்னவோ, சில நேரங்களில் ஏதாவது நிறம் கனவில் தோன்றினால், முழிப்பு வந்து 'அட நமக்கு வரும் கனவுகள் கலர் கனவுகள்' என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் எல்லா சமயமும் கலர் கனவுகளா என்று கேட்காதீர்கள். அதற்கு இன்னும் விடை தேடிக் கொண்டிருக்கிறேன்!
Friday, March 7, 2008
சுருக்கல் - 'அம்மாவின் கரிசனம்'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
அம்மாவின் கரிசனம்..
அம்மா அழுதாள்..
நானும் அழுதேன்!
விட்டு விட்டு..
காதில் விழுந்தது..
'பாவம்டி மாப்ள'!!
Thursday, March 6, 2008
சுருக்கல் - 'பரவசம்'
டி.ஆர் ஸ்டைலில் ஒரு சுருக்கல்...
பரவசம்..
உனை பார்த்த நாள் முதல் பரவசம்..
இனி நான் இல்லை என் வசம்..
என் இதயம் உனக்கே இலவசம்..
உன் மேல் வைத்தேன் நேசம்..
இப்போதெல்லாம் பிடிப்பது பூ வாசம்..
நான் சொல்வதெல்லாம் நிசம்..
சரி..
போய் இப்போ வைக்கிறேன் ரசம்..
இல்லைனா நண்பன் பாடுவான் வசம்!
நாசம்! நாசம்! அப்டீனு நீங்க சொல்றது கேக்குது! ஹி ஹி!!
Subscribe to:
Posts (Atom)