
எப்போதாவது நீங்கள் கனவை வேண்டுமென்றே கலைத்ததுண்டா? நான் கலைத்ததுண்டு. அவ்வப்போது ஏதேனும் கெட்ட கனவுகள் வந்தால் இது கண்டிப்பாக நடக்க வாய்ப்பில்லை என்று என் மூளையில் ஏதோ ஒன்று சொல்ல நான் கண் விழித்து பார்ப்பதுண்டு. எவ்வளவு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும் கஷ்டப்பட்டு கண்களை திறக்க முற்படுவேன். சில சமயங்களில் கண் திறக்க இயலாத போது கண் மூடிய நிலையிலேயே இயல்பு நிலைக்கு திரும்பி மறுபடியும் புது கனவை ஆரம்பிப்பதுண்டு.
இன்னுமொரு விஷயம். கனவுகள் கலர் கனவுகளா இல்லை கருப்பு வெள்ளை கனவுகளா என்ற கேள்விக்கு அவ்வப்போது விடை கிடைப்பதுண்டு. யாரோ எங்கேயோ என்னிடம் இந்த கேள்வியை கேட்டதாலோ என்னவோ, சில நேரங்களில் ஏதாவது நிறம் கனவில் தோன்றினால், முழிப்பு வந்து 'அட நமக்கு வரும் கனவுகள் கலர் கனவுகள்' என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் எல்லா சமயமும் கலர் கனவுகளா என்று கேட்காதீர்கள். அதற்கு இன்னும் விடை தேடிக் கொண்டிருக்கிறேன்!
No comments:
Post a Comment