Friday, December 21, 2007

விஜய் டிவி நிகழ்ச்சிகள்


முன்பெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவ்வளவாக நகைச்சுவை தென்படாது. திரைப்படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளை மட்டுமே காண்பிப்பர். ஆனால் இப்போது நகைச்சுவையை மட்டுமே கருவாக கொண்டு பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இம்மாற்றத்திற்கு வித்திட்டது விஜய் டிவி என்றுதான் சொல்ல வேண்டும்.

லொள்ளு சபா, கலக்கப்போவது யாரு, ரீல் பாதி ரியல் பாதி, கிங் குயின் ஜாக் போன்ற நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் ஹிட் நிகழ்ச்சிகள். அதிலும் இப்போது ரீல் பாதி ரியல் பாதி, கிங் குயின் ஜாக் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர் ஜகன் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியவில்லை. அடை மொழிகளில் இவர் சொல்லும் A ஜோக்ஸ் எராளம். உதாரணத்திற்கு பிரியாணிக்கும், குஸ்காவுக்கும் இவர் சொல்லும் விளக்கம் இருக்கிறதே..அடேங்கப்பா!! வடிவேலு பாணியில் சொன்னால், 'உக்கார்ந்து யோசிப்பாங்களோ!'

2 comments:

சாணக்கியன் said...

பதிவு ஆரம்பிச்சதுக்கு வாழ்த்துக்கள்!

விஜய் டீவி, ஸ்டார் விஜய் ஆனதுல இருந்தே புதுமைகள நிறைய துவங்கிருச்சுன்னு நெனைக்கிறேன். பொதுவா டீவி பக்கமே போகாத என்னைமாதிரி ஆளுங்களைக்கூட தரமான நிகழ்ச்சிகளால் கவர்ந்திருச்சு. தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு தவிர்க்க முடியாத நல்ல மாற்றத்துக்கு வித்திட்டாச்சு.

Magesh said...

சாணக்யா..உமது பின்னூட்டுக்கு மிக்க நன்றி! நீர் சொல்வது போல் இந்நிகழ்ச்சிகள் தரம் குறையாமல் தொடர்ந்து வெளிவரவேண்டும்! உமக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!