
நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால் பாரிஸ் ஹில்டனை உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். இவரின் குடும்ப சொத்து அமெரிக்க டாலரின் மதிப்பில் 2.4 பில்லியன் ஆகும். இந்த பண மிதப்பில் தான் என்னவோ இவர் பயங்கர ஆட்டம் போட்டார். 2003ல் இவர் தனது பாய் பிரண்டுடன் செய்த லீலைகள் இணையத்தில் வெளியாகியது. இந்த ஆண்டும் வேறு ஒரு சிக்கலில் சிறைக்கு சென்றார்.
ஆனால் இன்று இவர் தலையில் பெரிய இடி விழுந்திருக்கிறது. இவரது தாத்தா பாரன் ஹில்டன், 2.3 பில்லியனில் 97 விழுக்காட்டை அறக்கட்டளை ஒன்றிற்கு எழுதி வைத்து விட்டார். ஒரு தமிழ் திரைப்படத்தில் கிணறில் பாடி கிடக்கின்றது என்று ஊரே சொல்ல கௌண்டமணி அதை பார்க்க ஓடுவார். கிணறின் அருகே கிழவி ஒருவர் புலம்பிக் கொண்டிருப்பார் 'அய்யோ போச்சே! போச்சே!' என்று. அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
No comments:
Post a Comment