Saturday, July 12, 2008
சுருக்கல் - 'ஆறுதல்...'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
ஆறுதல்..
உறங்காமல் துரத்தும் நினைவுகளால்
விழிகள் மூட மறுக்க..
அவ்வப்போது கண்ணீர் துளிகள்!
குடை பிடித்த இமைகள்
ஆறுதலாய் அணைத்து முத்தமிட..
துளிகள் தொலைந்து தூக்கம் தழுவியது!
Saturday, May 3, 2008
சுருக்கல் - 'காயாகி..கனியாகி..பூவாகி..'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
காயாகி..கனியாகி..பூவாகி..
உறங்கும் போது பேசுகிறேன்..
பேசும் போது உறங்குகிறேன்..
காதோரம் செல்(ல) வண்டின் ரீங்காரம்..
என் காய்ந்த மனமும் கனிந்து பூவானதே!
Tuesday, March 25, 2008
சுருக்கல் - 'ஒரு துளி பொட்டு'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
ஒரு துளி பொட்டு..
அழகே!
உன் நெற்றியில் ஓயாமல் விளையாடிய ஒற்றை முடி..
அது சிந்திய வியர்வை துளிதானோ உன் நெற்றிப்பொட்டு?
சுருக்கல் - 'சலசலப்பு'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
சலசலப்பு..
பெண்ணே!
உன் மெல்லிய பாதம் தரையை தழுவ..
காய்ந்த சருகும் சலசலத்தது
என் மனம் எம்மாத்திரம்?
Sunday, March 23, 2008
ரகுவரன்..
வேலை பளு காரணத்தால் எழுத முடியவில்லை..ஒரு வாரம் போல் ஆகிவிட்டது..அதற்குள் ஒரு துயர சம்பவம் நிகழந்துவிட்டது. தமிழ் சினிமாவில் குரலாலும், உடல் வாகுவாலும் மட்டுமே வில்லன்கள் ஜொலித்த நிலையில், வில்லத்தனதுக்கே ஒரு புது இலக்கணத்தை வகுத்தவர் ரகுவரன். இவரின் மரணச் செய்தியை கேட்ட போது முகத்தில் சடாரென்று யாரோ அடித்தது போல் இருந்தது.
எழுத்துலகம் சுஜாதாவை இழக்க, அடுத்த சில நாட்களில் திரையுலகம் இன்னொரு இழப்பை சந்தித்திருக்கிறது. இவரை பிரிந்து வாடும் சுற்றத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
Tuesday, March 11, 2008
சுருக்கல் - 'பார்வைக்கு ஏக்கம்'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
பார்வைக்கு ஏக்கம்..
உயிரே..
சற்றே திரும்பி பார்த்தால்தான் என்ன?
ஏமாற்றி செல்லும் கார் மேகமாய் கடந்து செல்கிறாய்..
உன் மழை பார்வை படும் இடத்தில் காளானாய் முளைக்க துடிக்கிறேன்!!
இன்னுமொரு மலேசிய பாடல்
இதமான இன்னுமொரு மலேசிய பாடல் ஒன்று கீழே..
Monday, March 10, 2008
கனா காணும் காலங்கள்
எப்போதாவது நீங்கள் கனவை வேண்டுமென்றே கலைத்ததுண்டா? நான் கலைத்ததுண்டு. அவ்வப்போது ஏதேனும் கெட்ட கனவுகள் வந்தால் இது கண்டிப்பாக நடக்க வாய்ப்பில்லை என்று என் மூளையில் ஏதோ ஒன்று சொல்ல நான் கண் விழித்து பார்ப்பதுண்டு. எவ்வளவு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும் கஷ்டப்பட்டு கண்களை திறக்க முற்படுவேன். சில சமயங்களில் கண் திறக்க இயலாத போது கண் மூடிய நிலையிலேயே இயல்பு நிலைக்கு திரும்பி மறுபடியும் புது கனவை ஆரம்பிப்பதுண்டு.
இன்னுமொரு விஷயம். கனவுகள் கலர் கனவுகளா இல்லை கருப்பு வெள்ளை கனவுகளா என்ற கேள்விக்கு அவ்வப்போது விடை கிடைப்பதுண்டு. யாரோ எங்கேயோ என்னிடம் இந்த கேள்வியை கேட்டதாலோ என்னவோ, சில நேரங்களில் ஏதாவது நிறம் கனவில் தோன்றினால், முழிப்பு வந்து 'அட நமக்கு வரும் கனவுகள் கலர் கனவுகள்' என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் எல்லா சமயமும் கலர் கனவுகளா என்று கேட்காதீர்கள். அதற்கு இன்னும் விடை தேடிக் கொண்டிருக்கிறேன்!
Friday, March 7, 2008
சுருக்கல் - 'அம்மாவின் கரிசனம்'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
அம்மாவின் கரிசனம்..
அம்மா அழுதாள்..
நானும் அழுதேன்!
விட்டு விட்டு..
காதில் விழுந்தது..
'பாவம்டி மாப்ள'!!
Thursday, March 6, 2008
சுருக்கல் - 'பரவசம்'
டி.ஆர் ஸ்டைலில் ஒரு சுருக்கல்...
பரவசம்..
உனை பார்த்த நாள் முதல் பரவசம்..
இனி நான் இல்லை என் வசம்..
என் இதயம் உனக்கே இலவசம்..
உன் மேல் வைத்தேன் நேசம்..
இப்போதெல்லாம் பிடிப்பது பூ வாசம்..
நான் சொல்வதெல்லாம் நிசம்..
சரி..
போய் இப்போ வைக்கிறேன் ரசம்..
இல்லைனா நண்பன் பாடுவான் வசம்!
நாசம்! நாசம்! அப்டீனு நீங்க சொல்றது கேக்குது! ஹி ஹி!!
Thursday, February 28, 2008
சுருக்கல் - 'வெள்ளை காகிதம்'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
வெள்ளை காகிதம்..
பிரிண்டரில் நுழைந்த வெள்ளை காகிதமாய்
உன்னில் நுழைந்தேன்!
உன் அச்சுகள் என்னில் பதிய..
அர்த்தம் பெற்றதாய் உணர்கிறேன்!
Wednesday, February 27, 2008
மலேசிய பாடல்
நான் அண்மையில் ரசித்த மலேசிய பாடல் ஒன்று கீழே..
Thursday, February 21, 2008
சுருக்கல் - 'சிரிப்பு'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
சிரிப்பு..
குட்டி தீவே!
சில்லரை கொட்டுவது போல் சிரிக்கிறாய்!
என் செல்பேசி நிறுவனத்தின் உண்டியல் நிரம்பி வழிகிறது!!
Tuesday, February 19, 2008
அயம் பேக்..
பில்லா அஜித் சொல்வது போல..அயம் பேக்!
நான்கு நாள் உல்லாச பயணம் ஒரு வழியாக முடிந்தது! அந்த பாராசூட்டில் பறப்பது நானும் மற்றும் ஒரு நண்பரும் தானுங்கோ!!
Thursday, February 14, 2008
சுருக்கல் - 'ஐஸ் ஐஸ் பேபி'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
ஐஸ் ஐஸ் பேபி..
பூமிக்கு ஐஸ் வைத்தவன் யாரோ தெரியவில்லை..
பெண்ணே!
என் பூமி நீதான்..
எத்தனை முறை உருகினாலும்
ஐஸ் வைப்பேன்!
சுருக்கல் - 'களவாணி முத்தம்'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
களவாணி முத்தம்..
பெண்ணே!
எண்ணக் குவியலில் வழுக்கி..
உன் கன்னக்குழியில் விழுந்தேன்!
யாரும் பார்க்கும் முன்..
களவாணித்தனமாய் உனை முத்தமிட்டு எழுந்தேன்!!
காதலர் அன்பர்களுக்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!
Monday, February 11, 2008
சுருக்கல் - 'கண்ணீரின் கெஞ்சல்'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
கண்ணீரின் கெஞ்சல்..
கண்ணுக்குள் இருந்தவனை கை விடலாமா ?
விழியின் இமையை விடாது பிடித்துத் தொங்கும்..
கண்ணீரும் கெஞ்சுகிறது!
Saturday, February 9, 2008
சுருக்கல் - 'நரை'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
நரை..
நிலக்கரிச் சுரங்கத்தில் வெள்ளி!
அதை சாயம் பூசி
கரி ஆக்கினாள் கள்ளி!!
Thursday, February 7, 2008
ஜூம்பா
'நல்லா இடுப்ப வளைச்சி நெளிச்சி ஆடணும்' ங்கிற பருத்திவீரன் டயலாக் மாதிரி நேற்று 'டங்கா டுங்கா..' னு ஜூம்பா நடனம் போட்டேன். நண்பர்கள் இருவர் நல்ல cardio பயிற்சி என்று ஜூம்பா வகுப்பிற்கு அழைத்தனர். அடிவாங்கப் போகும் வடிவேல் அசால்டாக ஆட்டோவில் ஏறிப் போற மாதிரி காரில் ஏறி வகுப்பிற்கு சென்றேன்.
வகுப்பில், தக தகன்னு 16ல் இருந்து 60 வயதுக்குள் இருந்த அம்மணியர்கள் கூடி இருந்தனர். நாங்கள் போய் சேரவும் நடனம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. முன்னின்ற ஒரு பயிற்சியாளர் ஆட, நாங்கள் அவரை பார்த்து ஆடினோம் (அட.. அப்டீனு சொல்லிக்க வேண்டியதுதான்). படு வேகமான ப்ரசீலிய நாட்டு இசை சத்தமாக ஓடிக் கொண்டிருக்க ஒரு மணி நேரம் கை, கால், இடுப்பை நல்லா வளைச்சி நெளிச்சி ஆடினோம். பக்கத்தில் கடா போல் இருந்த நண்பன், ஆடுகிறேன் என்கிற சாக்கில் என் காலை ஒரு மிதி மிதித்தான். வலி பின்னி எடுத்தது! ஆனால் கூட ஆடினவர்களின் அழகு வலியை குறைக்க, இன்னும் பீறிகிட்டு ஆடினோம் :) ! வகுப்புகள் இனியும் தொடரும்!!!
Wednesday, February 6, 2008
சுருக்கல் - 'உயிரோசை'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
உயிரோசை..
பெண்ணே!
இதமான உயிரோசை எழுகிறது!
இதயத்தில் துளைகள் போட்டு
புல்லாங்குழல் வாசிக்கிறாய்!
Monday, February 4, 2008
சுருக்கல் - 'மென்பொறியாளர்கள்'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
மென்பொறியாளர்கள்..
அன்றைய கல்லூரி காலத்துப் பட்டாம்பூச்சிகள்!
கணினித்திரையின் வெளிச்சத்தில்..
இன்றைய மெல்லச் சாகும் விட்டில் பூச்சிகள்!
Saturday, February 2, 2008
சுருக்கல் - 'நமீதா'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
நமீதா..
நமீதா!
உன் பெயரில் விறகுக்கட்டை கடை வைத்தேன்
வியாபாரம் அமோகம்!
தண்ணீரில் தத்தளித்தவனும்..
உன் பெயரை கேட்டவுடன் மிதந்தான்!
மொத்தத்தில்..
Log ஆகா இருந்து kick தரும் Logic நீ!
Friday, February 1, 2008
சுருக்கல் - 'மெழுகுவர்த்தி'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
மெழுகுவர்த்தி..
பெண்ணே!
உன் பார்வையில் பற்றிக்கொண்ட மெழுகுவர்த்தி நான்!
முழுதாக நான் கறையும் முன்..
உன் மூச்சுக் காற்றால் என்னை அணைத்து விடு!
Thursday, January 31, 2008
'அட' போட வைக்கும் தீர்மானம்!
பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். வெளிநாட்டில் இருந்து இறங்கியவுடன் நம்ம ஊரு மாதிரி வருமா என்று பலர் எச்சில் வரா விட்டாலும், ரோட்டில் எச்சில் வரும் வரை காரி துப்புவர் என்று. நம்ம ஊருடா என்று இனி யாரும் அவ்வளவு எளிதாக நினைத்து சென்னையின் பொது இடங்களில் எச்சில் துப்பவோ, குப்பை போடவோ முடியாது. எச்சில் துப்பினால் ரூ 50 ம் , குப்பை கொட்டினால் ரூ 100 ம் அபராதம் விதிக்கப்படும். சென்னை மாநகராட்சி கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் சட்டம் போல் அல்லாமல் நிரந்தரமாக இச்சட்டம் வந்தால் பெயரளவில் இருக்கும் சிங்காரச் சென்னை நிசமாகவே சிங்காரமாக வாய்ப்பு உள்ளது. யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ, போலீசாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி தரும் விஷயம் இது.
Tuesday, January 29, 2008
சுருக்கல் - 'ரயில்'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
ரயில்..
கைகோர்த்து செல்லும் தண்டவாளங்கள்!
எரிச்சலில் புகைந்து செல்லும்
ஒண்டிக்கட்டை ரயில் வண்டி!
Monday, January 28, 2008
சுருக்கல் - 'குருதி'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
குருதி..
என் நாடி நரம்புகளில் இருக்கும் குருதியே..
என்ன ஒரு மயக்கும் அழகு உனக்கு!
உன்னைப் பார்க்கும் போதெல்லாம் மயங்குகிறேன்!
Saturday, January 26, 2008
சுருக்கல் - மண் வாசனை
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
மண் வாசனை..
பெண்ணே!
நீ அழகிய மழை மேகம்!
மண்ணாக இருந்து அன்னார்ந்து பார்க்கிறேன்!
மழையாக வந்து வாசம் சேர்ப்பாயா ?
சுருக்கல் - பொல்லாதவன்: பார்ட் 2!
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
பொல்லாதவன்: பார்ட் 2!
பொல்லாதவன் படம் பார்த்தது பாம்புக்கூட்டம்!
படம் முடிந்ததும் கட்டுவிரியன் சட்டையை கழற்ற..
நாகம் படம் எடுத்தது!
சுருக்கல் - 'ஹைக்கூ'
நண்பன் சாய் மகேஷுடன் இணையத்தில் உரையாடிக்கொண்டிருந்தேன். என்னை ஹைக்கூ கவிதைகள் எழுதச் சொன்னான். நான் இது வரை ஹைக்கூ படித்தது இல்லை. ஆகையால் ஒன்றை பரிமாறச் சொன்னேன். ந.முத்துகுமாரின் ஹைக்கூ ஒன்றை எடுத்து விட்டான் அவன்.
நள்ளிரவில் அண்ணா சாலை!
நியான் விளக்குகளை ரசிக்க முடியவில்லை..
பஞ்சரான வண்டியுடன் நான்!
இதை படித்த உடன் எனக்கு ஒரு எதிர்மறை ஹைக்கூ (என் பாணியில் சுருக்கல்) ஒன்று தோன்ற, அதை அவனிடம் சொன்னேன். மிகவும் ரசித்தான். அந்தச் சுருக்கல் கீழே!
அதே நள்ளிரவில் அண்ணா சாலை!
தனியாக பிளாட்பார்மில் படுத்து இருந்தவனுக்கு
அன்று மட்டும் காவல் காக்க ஆள் கிடைத்தது..
பஞ்சரான வண்டியுடன் ஒரு ஏமாளி!
Thursday, January 24, 2008
சுருக்கல் - 'குமிழி'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
குமிழி..
அழகே! காற்றில் மிதக்கும் குமிழி நான்!
ஆசையாய் தொடு! நீ தொட்ட கனம் உயிர் போகவே வாழ்கிறேன்!
சண்டை போடுங்கள்
உங்கள் கணவனோ மனைவியோ உங்களை தாக்கிப் பேசும் போது நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களா ? அப்படியென்றால் உங்கள் ஆயுள் காலம் கம்மி என்று சொல்கிறது வாஷிங்டன்னிலிருந்து வரும் ஒரு மனோதத்துவ ஆய்வுக் குறிப்பு. ஆகையால், இரு கைகள் சேர்ந்தால் தான் ஓசை எழும் என்று பழைய பஞ்சாங்கம் பாடாமல், எதிர் பேச்சு பேசி சண்டை போடுங்கள்.
ஆனால் சண்டைக்கு பின்னர் சமாதானம் ஆகுங்குள். எப்படி சமாதானம் ஆவது என்று தோன்றுகிறதா ? சிறு வயதில் உங்கள் தாய் அல்லது தந்தையிடம் அடி/ திட்டு வாங்கிய பின், அவர்கள் உங்களிடம் ஆசையாக பேசி செல்லம் காட்டியது ஞாபகம் இருக்கிறதா ? அதே வழியை பின்பற்றுங்கள்.
Tuesday, January 22, 2008
சுருக்கல் - 'கடுகளவு ஆசை'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
கடுகளவு ஆசை..
என்னவளே!
எண்ணெய் சட்டியில் கொதிக்கும் கடுகிற்கும்
உன்னைத் தொட்டு முத்தமிட ஆசை!
அன்று முதல் நானே சமைத்தேன்!
சுருக்கல் - 'அரசு பேருந்தின் போலீஸ் கம்ப்ளைன்ட்..'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
அரசு பேருந்தின் போலீஸ் கம்ப்ளைன்ட்..
நிற்கும் போது சீண்டாமல்
கிளம்பும் போது துரத்தி சீண்டுகின்றனர்
இடுப்பில் தொங்கிக்கொண்டு
சில்மிஷம் செய்யும் பயணிகள்!
சரண்யா பாக்யராஜ்..
பாரிஜாதம் படத்தின் மூலம் அறிமுகமான சரண்யா பாக்யராஜ், தற்கொலைக்கு முயன்றதாக தகவல். காதல் தோல்வி என்றும் பரவலாக செய்தி.
ஒரு துணிச்சலான முடிவை எடுக்க சிரஞ்சீவியின் மகளை பார்த்தாவது இவர் கற்றுக்கொண்டிருக்கலாம். எப்படி இருந்தாலும் அவப்பெயரும் துயரமும் தாய் தந்தையருக்குத் தான்!
Sunday, January 20, 2008
சுருக்கல் - 'வெற்றிப்படிக்கட்டுகள்'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
வெற்றிப்படிக்கட்டுகள்..
முயற்சியின் மேல் கொள்ளும் நம்பிக்கை!
தோல்வியின் போது கொள்ளும் மறுமலர்ச்சி!
கேளிப்பேச்சினை கேளா செவிட்டு உணர்ச்சி!
நான் நானாக இருக்க விரும்பாமல்
என்னை விட சிறப்பானவனாக இருக்க வேண்டும் என்ற உணர்வு!
நீச்சல்
நான்கு நாள் இடைவேளைக்கு பின் வலைப்பதிவினை எழுதுகிறேன். அப்படி என்ன பெரிதாக கழற்றினேன் என்று கேள்வி எழுகிறதா? ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை தான்.
சிறு வயதில் நீச்சல் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை. இப்போது நேரமும் சூழலும் இருப்பதால் நீச்சல் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன். நேற்று நீச்சல் முடித்து விட்டு உணவகம் ஒன்றிற்கு சென்று இருந்தேன். சாப்பிட்ட சாப்பாட்டில் ருசி தெரியவில்லை. காதில் தண்ணீர் புகுந்து இருந்தது. நண்பர்களிடம் வினாவிய போது, அவர்களுக்கும் தெரியவில்லை. யாராவது சொல்லுங்களேன், காதில் தண்ணீர் புகுந்தால் நாவினால் ருசி பார்க்க முடியாதா என்ன ?
Wednesday, January 16, 2008
சுருக்கல் - 'ஆப்பிள் லோகோ'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
ஆப்பிள் லோகோ (logo)..
தூரத்தில் இருந்து பார்த்தேன்
அவள் இதழ் அருகே பழமாகவும் நீ
அவள் மடியில் கணினியாகவும் நீ
ஆத்திரத்தில் உன்னை கடித்தேன்
உன் நிறுவனத்தின் நினைவுச் சின்னம் ஆனாய்!
Recession
Let's stop arguing whether 2008 will suffer from a recession or not. Its time to realize we already are in a recession.
As the DOW keeps tumbling day after day, as a retail investor I fear from investing in the markets anymore. As layoffs are on the rise, unemployment in the US is climbing. The holiday season is over and one cannot hope the retail sector to post increased sales in the months to come. Housing is in the deepest of all troubles. Keep a constant watch on your wallet!
சுருக்கல் - 'கடிகார அலறல்'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
கடிகார அலறல்..
என் படுக்கை அறை கடிகாரமே!
காணாததைக் கண்டது போல்
தினமும் ஒரு முறையாவது அலறுகிறாய்
உனக்கொரு செய்தி..
நான் இன்னும் பிரமச்சாரி தான்!
பொங்கல் படங்கள் - ரேங்கிங்
பொங்கலன்று 6 படங்கள் திரைக்கு வந்துள்ளன. நான் படித்த விமர்சனங்கள் படி எனது தரப் பட்டியல் இதோ.
இடம்1: பிரிவோம் சந்திப்போம்
இடம்2: பழனி
இடம்3: காளை
இடம்4: பீமா
இடம்5: வாழ்த்துகள்
இடம்6: பிடிச்சிருக்கு
Tuesday, January 15, 2008
சுருக்கல் - 'நிலவின் ஏக்கம்'
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
நிலவின் ஏக்கம்..
உன்னைத் தவிர எட்டு அழகிகள்
அவனையே சுற்றி வருவது தெரிந்தும்
உன்னையே சுற்றி சுற்றி வரும் என்னை
நீ பொருட்டாக மதிப்பதில்லையே!
ஏன் ?
நான் கடனாளி என்பதாலா ?
ராஜேஷுக்கு உதவி!
எனது நெருங்கிய குடும்ப நண்பரின் தோழர் ராஜேஷ்; லுகிமியா (இரத்த புற்று நோய்) நோயினால் பாதிப்படைந்து வாழ்வுடன் போராடிக்கொண்டிருகிறார். இப்பதிவின் மூலம் உங்களிடம் உதவி கோருகிறேன். மேலும் விவரங்களுக்கு http://www.helprajesh.com/ எனும் வலைப்பக்கத்தை நாடுங்கள்.
என் நண்பரின் பதிவு இதோ http://blog.richmondtamilsangam.org/2007/12/blog-post_16.html
தூக்கிட்டாங்கப்பா தடையை!
சுப்ரீம் கோர்ட் ஜல்லிகட்டிற்கு தடை விதித்தது பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். ஒரு வழியாக இப்போது தடையை நீக்கி உள்ளனர். அரங்கானல்லூர் கிராம மக்கள் அனைவரின் உண்ணாவிரதப்போராட்டமும், ரேஷன் கார்டு மற்றும் தேர்தல் பதிவு அட்டையினை திருப்பிக்கொடுத்துவிடுவோம் என்ற மிரட்டல்களும் வொர்க் அவுட் ஆகியுள்ளன. நான் கோரியது போல் திருமாவளவனும் குரல் கொடுத்து இருந்தார்.
அரசாங்கத்தின் மேற்பார்வையில் நடக்கப்போகும் இவ்வருட ஜல்லிக்கட்டு சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.
Monday, January 14, 2008
சுருக்கல்கள்..
எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...
முதல் சுருக்கல் இதோ!
மழை..
நெருக்கத்தின் சூடு தாங்காமல்
மேகங்கள் வேர்த்தன!
மெரினாவின் மணற்பரப்பில்
காதலர் கால்கள் புகலிடம் தேடி ஓடின!
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அனைத்து நண்பர் மற்றும் குடும்பத்தாருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள். சென்ற பொங்கலன்று 500 மைல் பயணம் செய்து போக்கிரி படம் பார்த்த நினைவு இன்னும் பசுமையாகவே இருக்கும் வேலையில் அடுத்த பொங்கல் வந்துவிட்டது. சும்மா ஜெட் வேகத்துல காலம் பறக்குது மாமே!
பிரிட்னி
ஆங்கில பாப் உலகில் பிரசித்தி பெற்ற பெண்மணி பிரிட்னி சிபியர்ஸ். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஆகியுள்ளது. இவரின் முதல் திருமணம் வெறும் 55 மணி நேரமே நீடித்திருந்தது. இப்போது பாகிஸ்தானியர் ஒருவரை காதலிக்கிறார். 'காலீப்' என்பவரை மணக்க விரும்புவதாக செய்தி. இதற்காக இஸ்லாமிய மதத்திற்கு மாறி பாகிஸ்தானுக்கு குடி போகவும் தயாராக உள்ளாராம். இதனால் அமெரிக்க பெண்களின் இடையே பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார் இவர்.
கிரிக்கெட் வீரர் இம்ரான் கானை மணந்த லண்டன் அழகி ஜெமீமா கான் விவாகரத்து பெற்று லண்டன் திரும்பியது நாம் அறிந்ததே. இப்போது இந்த கதை எப்படி போகின்றது என்று பார்போம்.
Sunday, January 13, 2008
ஆசை
நான் இந்தியா சென்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. இப்போது வீடு திரும்ப ரொம்ப ஆசை. சென்ற முறை வீடு சென்ற போது இரண்டு மாதம் ஆன உடனே மீண்டும் அமெரிக்கா திரும்ப வேண்டும் என்ற ஆசை. ஆக இக்கரைக்கு அக்கரை பச்சை. ஆனால் வீட்டு ஆசை வர இரண்டு ஆண்டுகள் தேவை பட்டதென்றால், வெளிநாட்டு மோகம் வர ஒரு மாதமே ஆனது. ஆனால் இம்முறை சென்றால் அப்படி ஆகாதென்றே நினைக்கிறேன்.
நான் இந்தியாவில் இல்லாத சமயம் குடும்பத்தில் பல காரியங்கள் நிகழ்ந்தன. அவற்றில் சுப காரியங்களும் உண்டு சவ காரியங்களும் உண்டு. இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் என் தந்தைக்கு இருதய சிகிச்சை நடந்த போது என்னால் அங்கு போக முடியாமல் போனது. சிகிச்சைக்கு பின்னர் நான் இன்னும் வீடு செல்லவில்லை. எனவே ஒரு குற்ற உணர்வு என்னுள் இன்றும் என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. என்னுடைய இளைய சகோதரன் அப்போது உறுதுணையாக இருந்ததால் சிகிச்சை சிரமமின்றி முடிந்தது.
எனது சகோதரனை பற்றியும் சொல்லியாக வேண்டும். அவ்வப்போது சூர்யா அல்லது கார்த்தியின் நேர்காணல் தொலைகாட்சியில் வந்தால், சூர்யா தனது தம்பியை பற்றி மிக உயர்வாக பேசுவார். அவர்கள் இருவரும் பிரிந்து இருந்த காலங்கள் பற்றியும் அப்போது அவர்கள் பரிந்து கொண்ட கனிவான கடிதங்கள், உரையாடல்கள் பற்றியும் இருவருமே சுவராஸ்யமாக பேசுவார்கள். அது போன்றதொன்றுதான் எங்கள் உறவும். சகோதரர்களின் இடையே உள்ள உறவை பற்றி விளக்க ஒரு நல்ல வார்த்தை ஒன்று கண்டுபிடிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
ரொம்பவும் உணர்ச்சிவசபட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன் ('விட்ரா விட்ரா சூனா பானா' என்கிறீர்களா என்ன ?). என் சொந்தக்கதை இருந்துவிட்டுப்போகட்டும் அடுத்த பதிவில் ஒரு ஜாலியான விஷயத்தைப்பற்றி கதைக்கிறேன்.
Friday, January 11, 2008
இது என்ன நியாயம்?
இன்று வந்த செய்திபடி தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது. காலம் காலமாக தமிழர்களின் வீர விளையாட்டாக இருந்து வருகிறது ஜல்லிக்கட்டு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் பள்ளிக்கூடத்தில் படித்த பாடத்தில் கூட இவ்விளையாட்டு நமது பாரம்பரியம் என்று கற்பிக்கப்பட்டது. ஆனால் இன்றோ இதற்கு இந்த நிலை.
சென்ற மாதம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானி கொடுக்க 41 ஒட்டகங்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டன. குர்பானி கொடுக்க தடை விதிக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்த போது தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஒட்டகங்களை வெட்ட தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர்.
'தமிழ்', 'தமிழன்' என்று கூக்குரலிடும் பா.ம.க.வினரும், விடுதலை புலிகளும் இதற்கு மட்டும் ஏன் மௌனம் சாதிக்கின்றனர்? சில்லறை விஷயங்களுக்கெல்லாம் கூப்பாடு போடும் இவர்கள் இப்போது முதுகை சொரிந்து கொண்டிருப்பது ஏன்?
இதற்காக இன்றைய தீர்ப்பை எதிர்க்கிறேன் என்று சொல்லவில்லை. அடுத்த முறை குர்பானி செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் நம் மக்கள் வழக்கு தொடர வேண்டும்.
Game on
The fight for the espresso/coffee market has now become intense. As Starbucks struggles under stormy conditions, McDonald's has decided to expand its service offering at each of its restaurants to serve cappuccinos, lattes and other drinks. All these days, Starbucks had more or less established a monopoly market, but now they have stiff competition from an equivalently strong opponent. Last year alone the shares of Starbucks lost 48%. At the same time share of McDonald's have increased by 33%.
BTW, did you know that McDonald's serve Burrito's for breakfast ? Chipotle's and TacoBell, please wake up!
Thursday, January 10, 2008
பாண்டியன் மரணம்
மண்வாசனை படத்தில் இயக்குனர் பாரதிராஜா மூலம் அறிமுகம் ஆகியவர் பாண்டியன். கிட்டத்தட்ட 80 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இவர் நேற்று மஞ்சள் காமாளை நோயால் மதுரையில் காலமானார். சில மாதங்களுக்கு முன் பணம் வாங்கி மோசடி செய்ததாக இவரை போலீஸ் கைது செய்து பின்பு விடிவித்தது. ஆரம்பத்தில் திமுகவில் இருந்து பின்னர் அதிமுகவின் பிரமூகரான இவர் அக்கட்சியின் பல பொதுகூட்டங்களிலும், தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டிருந்தார். 48 வயதான இவருக்கு ஒரு மகன் மற்றும் மனைவி உள்ளனர். திரையுலகைச் சேர்ந்த பலரும் இவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tuesday, January 8, 2008
How cool can Bill Gates get ..
Watch this video to see how cool Bill Gates can get. Bill is planning to move full time into Microsoft foundation. He will still however remain as the Chairman of Microsoft.
Barack Obama
'Barack Obama' - This is the name reverberating in the air across the United States. His resounding victory in the primary Presidential elections at Iowa for the Democrats has brought him so much attention that people have already sensed a feel of their next President. While Senator Hillary Clinton seems to be loosing the steam, scores of her supporters in the rest of the States are now shifting their sides to elect Obama to represent them at the November elections. Hardened political pros compare Obama's Iowa victory speech to legendary addresses given by the Kennedys, the Rev. Martin Luther King Jr. and President Ronald Reagan.
Born to a Kenyan father and an American mother, if elected as president he will be the first African-American President of the United States.
Subscribe to:
Posts (Atom)